சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளோர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தல்; முதியவர்கள் உஷாராக இருக்க எச்சரிக்கை!
சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய ஒரு மர்மக் காய்ச்சல் தீயாய் பரவி வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இன்றும், நாளையும் காய்ச்சல் குறித்த ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ளச் சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் தொண்டை பாதிப்பு போன்ற அறிகுறிகளோடு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்து உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால், சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விரைவான நடவடிக்கை, நோய் பரவலைக் கட்டுப்படுத்திப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.