ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்: மத்திய அமைச்சர், சாய்னா நேவால் பங்கேற்பு! Esha Gramotsavam finals to be graced by Union Sports Minister and Saina Nehwal

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்: மத்திய அமைச்சர், சாய்னா நேவால் பங்கேற்பு!  Esha Gramotsavam finals to be graced by Union Sports Minister and Saina Nehwal

கிராமப்புற மக்களுக்கான போட்டிகளில் 63,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; ₹67 லட்சம் பரிசுத் தொகை!

ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளன. இதில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.

ஈஷா தன்னார்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 17-வது ஈஷா கிராமோத்சவம் 2025 போட்டிகளில் 6 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலிருந்து 63,000க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் வாலிபால் மற்றும் பெண்கள் த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன. 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் பங்கேற்றன என்றார்.

இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசுகள்:

* இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன. இதில், 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் மோதுகின்றன.

* அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெறும்.

* இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு ₹5 லட்சம், ₹3 லட்சம், ₹1 லட்சம், மற்றும் ₹50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும்.

* போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்தமாக ₹67 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டியும் நடைபெறும்.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்:

* இந்தத் திருவிழாவில், தமிழகத்தின் வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து, கேரளாவின் பஞ்சரி மேளம், தெலங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

* 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுக் கடைகளும் அமைக்கப்படும்.

* பொதுமக்களுக்கான வண்ணக் கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25-க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து ₹33,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks