DMK Files case: டி.ஆர்.பாலுவை அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு.. அவதூறு வழக்கு அடுத்த மாதம் 13-க்கு ஒத்திவைப்பு! Annamalai-T.R. Baalu defamation case adjourned to October 13

     DMK Files case: டி.ஆர்.பாலுவை அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு.. அவதூறு வழக்கு அடுத்த மாதம் 13-க்கு ஒத்திவைப்பு! Annamalai-T.R. Baalu defamation case adjourned to October 13

திமுக பொருளாளர் தொடர்ந்த வழக்கு; நேரில் ஆஜராக உள்ளதாகப் பாஜக வழக்கறிஞர் பேட்டி!

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த ₹100 கோடி அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அடுத்த மாதம் அக்டோபர் 13-ஆம் தேதி டி.ஆர்.பாலுவை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என அண்ணாமலையின் வழக்கறிஞர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுகவின் சொத்துகள் குறித்த பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ₹10,000 கோடிக்கும் மேல் சொத்துகள் உள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.ஆர்.பாலு அண்ணாமலை மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டுச் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, டி.ஆர்.பாலு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அண்ணாமலை குறிப்பிட்ட 21 நிறுவனங்களில் 18 நிறுவனங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று அண்ணாமலை கேரளாவில் இருந்ததால், அவரது வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜரானார்.

வழக்கு விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பால் கனகராஜ், அண்ணாமலை தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்துக்களை வெளியிடவில்லை. ஒரு அரசியல் தலைவராகப் பொதுமக்களுக்குச் செல்ல வேண்டிய தகவலைத்தான் அவர் தெரிவித்தார். டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ₹10,000 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளது என்பது மத்திய அமைச்சகத்தில் உள்ள தகவலின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டது எனக் கூறினார்.


மேலும், அடுத்த மாதம் 13-ஆம் தேதி, டி.ஆர்.பாலுவை அண்ணாமலை நேரில் வந்து குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது. அவர் வரவில்லை என்றால், நான் குறுக்கு விசாரணை செய்வேன். யார் குறுக்கு விசாரணை செய்வது என்பது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks