Chennai student attacked: எழும்பூர் மெட்ரோ நிலையம் அருகே பயங்கரம் - பிஎச்.டி. மாணவி மீது கல்லால் தாக்குதல்! அஸ்ஸாம் இளைஞர் கைது! Chennai Police Arrest Man for Attacking Near Egmore Metro

 Chennai student attacked: எழும்பூர் மெட்ரோ நிலையம் அருகே பயங்கரம் - பிஎச்.டி. மாணவி மீது கல்லால் தாக்குதல்! அஸ்ஸாம் இளைஞர் கைது!  Chennai Police Arrest Man for Attacking  Near Egmore Metro

லண்டனில் பிஎச்டி படிக்கும் மாணவிக்கு ரத்தக் காயம்; குடிபோதையில் இருந்ததால் நிகழ்ந்த கொடூரம்!

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, லண்டனில் பிஎச்டி படிக்கும் இளம் பெண் ஒருவரை, குடிபோதையில் இருந்த அஸ்ஸாம் மாநில இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மேஹல் ரத்தோர் என்பவர், லண்டனில் பிஎச்டி படித்து வருகிறார். தனது சகோதரியைப் பெங்களூருவுக்கு வழியனுப்புவதற்காக எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அவர் சென்றிருந்தார்.

அப்போது, அதே இடத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்த அமீர் என்ற நபர், மேஹல் ரத்தோரை முறைத்துப் பார்த்ததாகத் தெரிகிறது. இதனை அவர் கண்டித்தபோது, ஆத்திரமடைந்த அமீர், அருகில் இருந்த கல்லை எடுத்து மேஹல் ரத்தோரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் அவருக்குப் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக, அவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எழும்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்திய அமீர் அதே இடத்தில் குடிபோதையில் படுத்துக் கிடந்ததைக் கண்டு, அவரை உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில், அவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks