இந்திய சினிமாவின் உயரிய கௌரவம்; 2023ஆம் ஆண்டுக்கான விருது அறிவிப்பு!
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான 2023ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தாதா சாகேப் பால்கே விருதுத் தேர்வுக் குழுவின் பரிந்துரை பேரில் வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, இந்திய சினிமாவுக்கு மோகன்லால் அளித்த சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) இந்த விருது மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.