திருவாரூர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லையெனக் குற்றம்சாட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்!
திருவாரூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். அவர் திருவாரூரில் நடத்திய பரப்புரையின்போது, மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்துப் பேசினார்.
திருவாரூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், அரசு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டன. ஆனால், இங்குள்ள மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்க வேண்டிய நிலைதான் உள்ளது. அதுவும் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது" எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருவாரூர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை எனவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.