பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கவும்! - காவல் துறை வேண்டுகோள்!
கோயம்புத்தூர் நகரில் ஆதரவின்றி கண்டெடுக்கப்பட்ட நபர்களைப் பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல் துறை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக, பந்தயசாலை காவல் நிலைய ஆய்வாளர், மேற்கு மண்டல மாநகராட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திண்டுக்கல் வடிவேல் (48), பி.என். பாளையம் செல்வராஜ் (66), குனியமுத்தூர் மணி (55), கணேஷ் (51), அடையாளம் தெரியாத 60 வயது வாய் பேச இயலாத நபர், மற்றும் பழனியம்மாள் (58) ஆகிய ஆறு பேர் ஆதரவின்றி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆறு பேரையும் மாநகராட்சியின் பாதுகாப்பில் வைத்துப் பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.