திடீர் சூறைக்காற்றுடன் பெய்த மழை: சென்னை விமான சேவை பாதிப்பு! Chennai Airport Services Affected Due to Sudden Storm and Rain

திடீர் சூறைக்காற்றுடன் பெய்த மழை: சென்னை விமான சேவை பாதிப்பு! Chennai Airport Services Affected Due to Sudden Storm and Rain

14 விமானங்கள் தாமதம்... பயணிகள் பெரும் அவதி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை திடீரெனப் பெய்த பலத்த சூறைக்காற்றுடன் கூடிய இடி, மின்னல் மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பெய்த பலத்த மழை, விமான நிலையத்தின் செயல்பாடுகளை முடக்கியது. இதன் விளைவாக, தோஹாவிலிருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், இங்குத் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்து, பின்னர் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

இதே போன்று, துபாய், லண்டன், ஷார்ஜா போன்ற நகரங்களிலிருந்து வந்த விமானங்களும், தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்த பின்னர், மழை குறைந்ததும் பாதுகாப்பாகத் தரையிறங்கின. அதேபோல், சென்னையிலிருந்து புறப்படவிருந்த மொரிஷியஸ், தாய்லாந்து, துபாய், ஷார்ஜா, லண்டன், அபுதாபி, டெல்லி, கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.

மொத்தம் 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்தத் திடீர் காலமாற்றத்தால், விமான நிலையத்தின் அன்றாட செயல்பாடுகள் சிறிது நேரம் ஸ்தம்பித்தன.

 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks