மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு! Central University of Tamil Nadu Holds 10th Convocation with President Draupadi Murmu

மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு! Central University of Tamil Nadu Holds 10th Convocation with President Draupadi Murmu

 

மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கம் வழங்கினார்.



திருவாரூர். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மொத்தம் 1,010 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிய 45 மாணவர்களுக்கு (34 பெண்கள், 11 ஆண்கள்) குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். இவர்களுடன், ஆய்வில் சிறந்து விளங்கிய 44 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் (27 பெண்கள், 17 ஆண்கள்) பட்டங்கள் வழங்கப்பட்டன.

குடியரசுத் தலைவரின் உரை

பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய குடியரசுத் தலைவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளம் பட்டதாரிகளின் பொறுப்புகளை எடுத்துரைத்து உத்வேகம் அளித்தார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், அமைச்சர்கள் கோவி. செழியன், கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks