Balochistan attack: பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்: சொந்த மக்கள் 30 பேர் பலி! Pakistan military attack: 30 of its own people killed!

Balochistan attack:  பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்: சொந்த மக்கள் 30 பேர் பலி!  Pakistan military attack: 30 of its own people killed!

பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக நடந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு; சர்வதேச அளவில் கண்டனம்!

பாகிஸ்தான் விமானப்படை, தனது சொந்த நாட்டின் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசியதில் அப்பாவிப் பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் பலுசிஸ்தான் விடுதலைப் படை உள்ளிட்ட பிரிவினைவாதக் குழுக்களை ஒடுக்குவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில், அருகிலிருந்த கிராமங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டதால், அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன், உள்நாட்டுப் போர் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, சர்வதேச நாடுகள் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks