தினகரன் - அண்ணாமலை திடீர் சந்திப்பு: மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தல்?
சென்னை அடையாறில் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சென்னை, செப்டம்பர் 22: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு திடீரெனச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அ.ம.மு.க.வை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் இருவரும் ஆலோசித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமான எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், இது தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
in
அரசியல்