ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை; தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது - அனுராக் தாக்கூர் பதிலடி!
வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லையென பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள சூழலை இந்தியாவில் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அனுராக் தாக்கூர், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி சுதந்திரமாகச் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது மற்றும் நீக்குவது தொடர்பான விதிகள் தெளிவாக உள்ளன" என்று கூறினார். மேலும், ராகுல் காந்தி தனது அரசியல் ஆதாயத்திற்காக, இந்திய ஜனநாயக அமைப்பின் மீது தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம், வாக்காளர்பட்டியலிலிருந்துது பெயர்களை நீக்குவதற்குச் சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. இறந்தவர்கள், ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவுச் செய்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இந்தச் செயல்முறையில் எந்தவிதப் பாரபட்சமும் இல்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.