இந்தியத் திரையுலக வரலாற்றில் இது மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் எனத் தகவல்!
யூஃபோரியா, தி ஒயிட் லோட்டஸ் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனம், அவருக்கு ₹530 கோடிக்கும் மேல் சம்பளம் தருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை, நடிகருக்கான சம்பளம் ₹415 கோடியும், படத்திற்கான விளம்பர ஒப்பந்தங்களுக்கு ₹115 கோடியும் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிட்னி ஸ்வீனி இந்த வாய்ப்பை ஏற்றால், இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் இருப்பார். மேலும், இது இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில், ஒரு இந்திய பிரபலத்துடன் காதலில் விழும் இளம் அமெரிக்க நடிகையாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
2026-ன் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நியூயார்க், பாரிஸ், லண்டன் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி குறித்து நடிகை சிட்னி ஸ்வீனி தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.