அன்புமணி ராமதாஸ் பதவிக்காலம் முடிந்தது; தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!
பாமக-வின் உண்மையான தலைவர் நான்தான், அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பாமகவின் உண்மையான தலைவர் நான்தான். அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. தனது பதவிக்காலம் ஓராண்டு நீடிப்பதாக, அவர் தேர்தல் ஆணையத்திற்கு சட்டவிரோதமான மற்றும் தவறான தகவலை அனுப்பியுள்ளார். இது தேர்தல் ஆணையத்தைத் தவறாக வழிநடத்தும் செயல்" என்று கூறியுள்ளார்.
மேலும், எனது தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.