அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி! - ஓ.பி.எஸ். திட்டவட்டம்! AIADMK's Success Hinges on Unity: OPS

அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி! - ஓ.பி.எஸ். திட்டவட்டம்!  AIADMK's Success Hinges on Unity: OPS

திமுகவுக்கு சாதகமாகிவிடும் எனக் கருத்து; டெல்லி பாஜக தலைமையிலிருந்து அழைப்பு வரவில்லை எனவும் பேட்டி!


அதிமுகவின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தப் பிளவு நீடித்தால், அது தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் பிளவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றுபடாவிட்டால், அது எதிர்க்கட்சிக்கு (தி.மு.க) சாதகமாகிவிடும். இது அ.தி.மு.க. தொண்டர்களிடையே விரக்தியை ஏற்படுத்தும் எனக் கூறினார்.

அதிமுகவை ஒன்றிணைக்க பா.ஜ.க.வின் மத்திய தலைமை ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று கேட்டதற்கு, டெல்லி பா.ஜ.க. தலைமையிலிருந்து எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks