போலீஸ் பாதுகாப்பை மீறி சிலை ஊர்வலம் சென்றதாக 53 பேர் மீது வழக்கு! Police File Case Against 53 People for Violating Ganesh Chaturthi Procession Rules

போலீஸ் பாதுகாப்பை மீறி சிலை ஊர்வலம் சென்றதாக 53 பேர் மீது வழக்கு! Police File Case Against 53 People for Violating Ganesh Chaturthi Procession Rules
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மணலி மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, போலீசாரின் பாதுகாப்புத் தடையை மீறி அனுமதி மறுக்கப்பட்ட வழித்தடத்தில் சிலை எடுத்துச் செல்ல முயன்றதாக, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மணலி மனோகரன் மற்றும் நடிகர் கனல் கண்ணன் உட்பட 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் போலீசார் முள்வேலி அமைத்து, ஊர்வலத்தை ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லக் கட்டுப்படுத்தினர். ஊர்வலம் முடிந்த பிறகும், இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் தடையை மீறி, கையில் சிலைகளை ஏந்தி, அனுமதி மறுக்கப்பட்ட இடம் வழியாகச் செல்ல முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த ஜாம்பஜார் போலீசார், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks