மீன்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ரூ.51 லட்சம் சுருட்டிய நபர் கைது! Man Promised Fisheries Dept Jobs Rs 51 Lakh Job Scam Busted by Central Crime Branch

மீன்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ரூ.51 லட்சம் சுருட்டிய நபர் கைது! Man Promised Fisheries Dept Jobs Rs 51 Lakh Job Scam Busted by Central Crime Branch

 

மீன்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து ரூ.51 லட்சம் சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.




மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.51 லட்சம் மோசடி செய்த கோவை நபரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினமாலா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கோவையைச் சேர்ந்த ரகுமான் என்பவர் தனக்கும் மேலும் ஐந்து பேருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.51,00,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ரகுமான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விருகம்பாக்கத்தில் 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகை நிறுவனத்தை நடத்தி வந்த அவர், வங்கி மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.

போலீசார் ரகுமானைக் கோவையில் வைத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற வேலைவாய்ப்பு மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks