அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தகவல்; எதிர்கால சலுகைகள் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை (செப்.15) நிறைவடைய உள்ள நிலையில், தவறினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்.15-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதற்கு முன்பு பல முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லையென வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, வருமான வரி செலுத்துவோர், இந்தக் காலக்கெடுவுக்குள் தங்கள் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ITR தாக்கல் செய்யத் தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், இதனால் எதிர்காலத்தில் கடன் பெறுவது, கிரெடிட் கார்டு ஒப்புதல் அல்லது அரசாங்க சலுகைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.