40 கிலோ மூட்டைக்கு ₹40 கமிஷன்.. திருவாரூரில் விஜய் பரபரப்புக் குற்றச்சாட்டு! ₹40 commission for 40 kg bag Vijays shocking accusation in Thiruvarur

விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமை; அரசு தரும் தொகையைவிடக் கமிஷன் அதிகம் என ஆவேசம்!

திருவாரூர், செப்டம்பர் 20: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் அனுபவித்துவரும் கொடுமை குறித்துத் தனக்குப் புகார் வந்திருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு மூட்டை நெல்லுக்கு அரசு ₹10 கொடுத்தும், ஊழியர்கள் ₹40 கமிஷன் வாங்குவதாகவும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

திருவாரூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவிப்பதாகப் புகார் வந்தது. நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை ஏற்றி, இறக்க 40 கிலோ மூட்டைக்கு ₹40 கமிஷன் வாங்குறாங்களாம் என்றார்.

மேலும், அரசாங்கமே ஒரு மூட்டைக்கு ₹10 தான் கொடுக்குது. ஆனால் இவங்க, அதுக்கு மேல ₹40 கமிஷன் வாங்குறாங்க. இது எந்த விதத்தில் நியாயம்? என அவர் ஆவேசமாகப் பேசினார். விவசாயிகளின் பிரச்சனைகளை அரசு உடனடியாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

நீங்கள் நம்பும் பாதுகாப்ப - இப்போதே வாங்குங்கள்!