தேசியக்கொடியின் நிறத்தில் மிளிரும் அணை; உபரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக 3,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தேசியக்கொடியின் மூவண்ண நிறத்தில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் அணை அனைவரையும் கவர்ந்துள்ளது.
சாத்தனூர் அணை இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் பாதுகாப்பைக் கருதி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர், விவசாய நிலங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணையின் நுழைவு வாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தேசியக்கொடியின் நிறத்தில் ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்கவர் காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலர் அணையின் அழகைக் காண வருகை தருகின்றனர்.