தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிரதமர் பாராட்டு!
டெல்லி, செப்டம்பர் 20: 2023ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோகன்லாலின் நடிப்புத் திறமையையும், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டி, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன்லால் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்புத் திறமையும், சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பும் பாராட்டத்தக்கது" என மோடி குறிப்பிட்டுள்ளார்.