3 தலைமுறையாகப் பயன்படுத்திய சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: கிராம மக்கள் புகார்! VCK men occupy road, cultivate rice; villagers stage protest in Tiruvannamalai

3 தலைமுறையாகப் பயன்படுத்திய சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: கிராம மக்கள் புகார்!  VCK men occupy road, cultivate rice; villagers stage protest in Tiruvannamalai

அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காளிங்காபுரம் கிராமத்தில், மூன்று தலைமுறையாகப் பயன்படுத்தி வந்த பொது சாலையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) பிரமுகர்கள் ஆக்கிரமித்து இரவோடு இரவாக நெல் பயிரிட்டதாகக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாடவரம் ஊராட்சியில் உள்ள காளிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்தச் சாலையை வி.சி.க. பிரமுகர்களான ரமேஷ், பூங்காவனம் மற்றும் சிவா ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு, அந்த இடம் புறம்போக்கு இடம் என்றும், ஆக்கிரமிப்பு செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனாலும், நேற்று நள்ளிரவு ரமேஷ், பூங்காவனம், சிவா ஆகிய மூவரும் இணைந்து, அந்தச் சாலையில் நெல் பயிரிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கிராம மக்களின் குற்றச்சாட்டு:

* தங்கள் கிராமத்தில் அரசு குடிநீர், 100 நாள் வேலைத்திட்டம், மின்சார இணைப்பு போன்ற திட்டங்களை வழங்குகிறது. ஆனால், கடந்த 60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை வி.சி.க. பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

* விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லவும், கர்ப்பிணிப் பெண்களை அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், பள்ளி மாணவர்களும் கூட சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

* மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை அவரிடமே ஒப்படைத்து விடுவோம் என எச்சரித்தனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks