அங்கே பேசக்கூடாது, இங்கே பேசக்கூடாது எனப் பல கட்டுப்பாடுகள்! - நாகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பேச்சு!
நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஆவேசமாகக் குற்றம்சாட்டினார். அங்கே பேசக்கூடாது, இங்கே பேசக்கூடாது; 5 நிமிடம்தான் பேச வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். நான் பேசுவதே 3 நிமிடம்தான் என அவர் பேசியது தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், மக்களிடம் எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள நான் வரும்போதெல்லாம், 'இங்கே பேசக்கூடாது, அங்கே பேசக்கூடாது; 5 நிமிடம்தான் பேச வேண்டும்' எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. நான் பேசுவதே 3 நிமிடங்கள்தான். அந்த 3 நிமிடத்தில் பல விஷயங்களைப் பேச வேண்டியுள்ளது என்றார்.
மேலும், இது போன்ற நெருக்கடிகள் என் மீது வரும்போதுதான், நான் சரியான பாதையில் பயணிக்கிறேன் என்பதை உணர்கிறேன். என் மீது கோடிக்கணக்கான மக்களின் அன்பு இருக்கும்வரை, நான் யாரையும் கண்டு பயப்பட மாட்டேன். என் மக்கள் சேவை தொடரும் என உறுதியளித்தார்.