என் அரசியல் பயணம் மக்களுக்கானது என நாகையில் த.வெ.க. தலைவர் விளக்கம்!
தனது பிரச்சாரத்தை ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் நடத்துகிறேன் என்பதற்கு, யாருக்கும் எந்தப் பிரச்சனையும், பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காகத்தான் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், பொதுவாக, எனது பிரச்சாரப் பயணங்களைச் சனிக்கிழமைகளில்தான் மேற்கொள்கிறேன். இதன் நோக்கம், வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள் என யாருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதுதான். இது எனது அரசியல் பயணம் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் அளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
என் அரசியல் பயணம் மக்களுக்கானது. அவர்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் எனது பயணம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.