பானிபூரிக்காக நடுரோட்டில் தர்ணா: குஜராத்தில் நடந்த விநோத சம்பவம்! Road traffic halts in Vadodara after a womans pani puri dispute

ரூ.20க்கு 6 பூரிக்கு பதிலாக 4 பூரிகள் கொடுத்ததால் ஏற்பட்ட விவாதம்; போலீசார் அதிர்ச்சி!

தனக்குக் கிடைக்க வேண்டிய 6 பானிபூரிகளுக்குப் பதிலாக 4 பூரிகள் மட்டுமே கொடுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு பெண், நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வதோதரா நகரின் சுர்சாசர் பகுதியில் ஒரு பெண் நடுரோட்டில் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரிடம் போராட்டத்திற்கான காரணத்தைக் கேட்டனர். அந்தப் பெண் அளித்த பதிலால் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

என்ன நடந்தது?

அந்தப் பெண் ₹20க்கு 6 பானிபூரிகள் வாங்கியுள்ளார். ஆனால், கடைக்காரர் அவருக்கு 4 பூரிகள் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால், தனக்குக் கிடைக்க வேண்டிய 2 பூரிகளைக் கூடுதலாகக் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த அந்தப் பெண், நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

போலீசாரிடம் கண்ணீர்மல்கப் பேசிய அந்தப் பெண், தனக்குக் கிடைக்க வேண்டிய 6 பானிபூரிகளையும் வழங்க வேண்டும் என்றும், குறைவாகப் பூரி கொடுத்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதனைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த போலீசார், அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

ஒரு வழியாக, போலீசார் சமாதானப்படுத்திய பிறகு அந்தப் பெண் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் ஏற்பட்ட போக்குவரத்துப் பாதிப்பு சீரானது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!