ஒற்றைக் கட்சி ஆட்சியில் ஊழல் பெருகும் என்றும், திமுக அரசு மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்று குற்றச்சாட்டியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒற்றைக் கட்சி ஆட்சியில் ஊழல் உச்சகட்டத்திற்குச் சென்றுவிடுகிறது. மக்களுக்கு எந்தவிதமான அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தற்போதைய தி.மு.க.அரசுத் தீர்வு காணவில்லை. பல்வேறு திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
முக்கியக் குற்றச்சாட்டுகள்:
கோவில் பராமரிப்பு: "விளம்பரத்திற்காக மட்டுமே கோவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் முறையான பராமரிப்பின்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
டெட் தேர்வு: ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த டெட் தேர்வு அவசியம் என்றாலும், அவர்களுக்குப் பணி உயர்வுக்கான டெட் தேர்வை நடத்தும்போது போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"2026-ல் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இல்லையென்றால், ஒற்றைக் கட்சி ஆட்சியை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள்" என்றும் கிருஷ்ணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.