பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர்க்கை 15% அதிகரிப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி! Polytechnic Admissions Up by 15%: Higher Education Minister's Interview

பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர்க்கை 15% அதிகரிப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி! Polytechnic Admissions Up by 15%: Higher Education Minister's Interview

அரசு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தியதன் விளைவு!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 15 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பெருமிதத்துடன் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவையொட்டி தஞ்சாவூரில் 117 நபர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு குறித்துப் பேசிய அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் இணைந்து, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, பாலிடெக்னிக் படிப்புகளில் உள்ள புதிய பாடப்பிரிவுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக, மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 15 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

மேலும், தனியார் கல்லூரிகளில் உள்ள புதிய பாடத்திட்டங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, அரசு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks