கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து விபத்து: 12 மலேசிய சுற்றுலா பயணிகள் காயம்! 12 Malaysian Tourists Injured in Kodaikanal

100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு!

கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.

மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், கொடைக்கானல் பழனி சாலையில் உள்ள வெள்ளைப்பாறை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்திலிருந்த 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 12 மலேசிய சுற்றுலாப் பயணிகளும் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், உள்ளூர் மக்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!