விஜய் முகத்தில் குத்த வேண்டும் - நடிகர் ரஞ்சித் மீது காவல்துறை புகார்! Should Punch Vijays Face Police Complaint Filed Against Actor Ranjith

விஜய் முகத்தில் குத்த வேண்டும் - நடிகர் ரஞ்சித் மீது காவல்துறை புகார்! Should Punch Vijays Face Police Complaint Filed Against Actor Ranjith

விஜயின் முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என தனக்கு தோன்றுவதாகக் கூறிய நடிகர் ரஞ்சித் ரஞ்சித் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, த.வெ.க. ஆதரவாளர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்-ஐ நேரில் பார்த்தால், அவரது முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என்று நடிகர் ரஞ்சித் பேசியதற்கு, த.வெ.க. ஆதரவாளர் ஒருவர் காவல்துறை புகார் அளித்துள்ளார். ரஞ்சித் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாகவும், இது கொலை மிரட்டல் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பொது மேடையில் பேசிய நடிகர் ரஞ்சித், விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆவேசமாகக் கருத்து தெரிவித்தார். அப்போது, "விஜய்யை நேரில் பார்த்தால், அவரது முகத்தில் ஓங்கி குத்த வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பேச்சு, அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து, ரஞ்சித்தின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாகவும், இது ஒரு அரசியல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்றும் கூறி, த.வெ.க. ஆதரவாளர் ஆர்.கே. ஜலில் என்பவர் அவர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks