பாமகவில் திடீர் திருப்பம்? விழுப்புரம் பொதுக்குழுவில் ராமதாஸ் தலைமையில் முக்கிய முடிவு!

பாமகவில் திடீர் திருப்பம்? விழுப்புரம் பொதுக்குழுவில் ராமதாஸ் தலைமையில் முக்கிய முடிவு!

பாமகவில் திடீர் திருப்பம்? விழுப்புரம் பொதுக்குழுவில் ராமதாஸ் தலைமையில் முக்கிய முடிவு!


பாமகவில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், இன்றைய பொதுக்கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம்குறித்து ராமதாஸ் தலைமையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 17) அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், கட்சியின் எதிர்காலம்குறித்து ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக, பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணியின் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில், ராமதாஸ் கூட்டியுள்ள இந்தப் பொதுக்குழு, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தலைமைகுறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இந்தக் கூட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையை ஏற்படுத்தும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோல், அன்புமணியை செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கூடும் எனவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொதுக்குழுவில், பாமகவின் எதிர்கால வியூகம், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, மற்றும் உட்கட்சி விவகாரங்கள்குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks