அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு - மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு! Mahua Moitra's Behead Amit Shah Comment Sparks Controversy

அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு - மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு! Mahua Moitra's Behead Amit Shah Comment Sparks Controversy

சர்ச்சை பேச்சுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம்!




வங்கதேசத்தினர் ஊடுருவல் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மிரட்டும் வகையில் பேசியதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மஹுவா மொய்த்ரா, வங்கதேசத்தவர் ஊடுருவலுக்கு மத்திய உள்துறை அமைச்சகமே பொறுப்பு என்று குற்றம்சாட்டினார். அப்போது, "இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், ஊடுருவல்காரர்கள் நுழைய அனுமதித்தால், நம் பெண்களை அவமதித்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மேஜையில் வைக்க வேண்டும்" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மஹுவா மொய்த்ராவின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்படப் பல தலைவர்கள் அவரது கருத்துகள் வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks