குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளரைத் தேர்வு செய்யக் கார்கேவுக்கு முழு அதிகாரம்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 21-ல் நிறைவு பெறும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக நாளைக் காலை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் முழு அதிகாரத்தையும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி வழங்கியுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வேட்பாளரைத் தேர்வு செய்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவும், இறுதிக்கட்டத்தில் விரைந்து முடிவெடுக்கவும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியா கூட்டணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரின் பெயர், நாளை (ஆகஸ்ட் 19) காலை வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கேவின் அடுத்தகட்ட நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.