இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வியூகம்.. பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்!
பாகிஸ்தானின் கடற்படை பலத்தை அதிகரிக்க சீனா உதவி செய்வது, இந்தியாவுக்குப் புதிய அச்சுறுத்தல் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தானின் கடற்படை பலத்தை அதிகரிக்கும் நோக்கில், சீன அரசு அந்நாட்டிற்கு மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது.
இது, இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கையும், பாகிஸ்தானின் ராணுவ பலத்தையும் அதிகரிக்கும் சீனாவின் புதிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைச் சீனாவிடமிருந்து பெற்றுள்ள பாகிஸ்தான், இதன் மூலம் தனது கடற்படை பலத்தை கணிசமாக உயர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்குப் போட்டியாக, பாகிஸ்தானின் பலம் அதிகரிப்பது, இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்குப் புதிய ராணுவ அச்சுறுத்தலை உருவாக்கும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.