ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பிளான் ரூ.249 நீக்கம்!
குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக் ஆக இருந்த, ரூ.249 ப்ளானை ஜியோ நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்து, தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் ஆக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் பேக் ஆக இருந்த ரூ.249 திட்டத்தை அதிகாரபூர்வமாக நீக்கியுள்ளது. இதனால், இனி ஜியோவில் முழு மாதச் சலுகைக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் பேக் ரூ.299 ஆக அதிகரித்துள்ளது.
ரூ.249 ரீசார்ஜ் பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. குறைந்த விலையில் முழு மாத சலுகை கிடைத்ததால், இது பல வாடிக்கையாளர்களின் விருப்பமான திட்டமாக இருந்தது.
தற்போது ஜியோவில் குறைந்தபட்ச முழு மாதாந்திர பேக் ரூ.299 ஆகும். இந்தத் திட்டத்தில் 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், அத்துடன் JioTV, JioCinema (பிரீமியம் அல்ல), JioCloud போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட சலுகைகள் அடங்கும்.
ஜியோவில் ரூ.239 போன்ற சிறிய ரீசார்ஜ் திட்டங்கள் இன்னும் இருந்தாலும், அவை முழு மாதத்திற்கு (28 நாட்கள்) பதில் 22 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.