கல்லீரல் திருட்டு மோசடி: புரோக்கர்கள் மற்றும் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!
கல்லீரல் மோசடியில் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இதற்கு யார்? காரணம் என்று காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பெண் ஒருவர் கல்லீரல் திருட்டு மோசடி சம்பவம்குறித்த கேள்விக்கு?
காவல்துறை விசாரித்து வருகிறது புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் இதற்கு யார்? காரணம் என்று காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும், காவல்துறை விசாரணை தொடர்ந்து இந்த மோசடியில் ஏதேனும் மருத்துவமனை? சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், ரூ.28.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்த மோசடி தொடர்பாகக் காவல்துறை விசாரித்து வருகிறது. புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளோம். காவல்துறை விசாரணைக்குப் பிறகு, இதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
சைதாப்பேட்டை மருத்துவமனை:
* 120 ஆண்டுகள் பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ.28.70 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
* அதிநவீன வசதிகளுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, பிரசவப் பிரிவு, அறுவை சிகிச்சை மையம், ரத்த வங்கி, ஒருங்கிணைந்த ஆய்வகம் உள்ளிட்டவை இந்தக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
* இந்தப் புதிய கட்டிடத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் துணை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
* 110 படுக்கை வசதியுடன் கூடிய இந்தப் புதிய கட்டிடம், சைதாப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிண்டி, பள்ளிக்கரணை பகுதி மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.