ஓய்வு வயதை மாற்ற வேண்டும்... சங்கர் ஜிவால், சைலேஷ்குமார் யாதவ் பிரிவு உபசார விழாவில் கமிஷ்னர் நெகிழ்ச்சிப் பேச்சு!
"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என் மனதில் பாரமாக உள்ளது" - சைலேஷ்குமார் யாதவ்!
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவலர் வீட்டு வசதி கழக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அவர்களுக்குப் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
காவல் ஆணையர் அருண்:
விழாவில் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாக சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. எனவே, காவல்துறை அதிகாரிகள் ஆரோக்கியமாக இருக்கும்போது 60 வயதில் ஓய்வு பெறுவது சரியானதல்ல. வெளிநாடுகளில் உள்ளதைப் போல், ஓய்வு பெறும் வயதை மாற்ற வேண்டும்" என்று கூறினார்.
டிஜிபி சைலேஷ்குமார் யாதவ்:
டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் தனது உரையில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எனது மனதில் கடும் பாரமாகவே உள்ளது. அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். தனது பணியின்போது நேர்மையாகவும் தைரியமாகவும் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
டிஜிபி சங்கர் ஜிவால்:
டிஜிபி சங்கர் ஜிவால், "என்னுடன் பயணித்த எனது பாதுகாப்பு அதிகாரிகள்தான் உண்மையான கதாநாயகர்கள். உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தால் உயர்வுக்கு வழிவகுக்கும்" என்று தனது சக அதிகாரிகளைப் பாராட்டினார்.
in
தமிழகம்