பாரதியார் வரிகளோடு வெடிகுண்டு மிரட்டல்! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான்..." என்ற கவிதை வரியுடன் இ-மெயில் மிரட்டல்! மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனை!
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் விடுத்த நபர், தனது இ-மெயிலில் "படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான்... போவான்... ஐயோ என்று போவான்!" என்ற பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்தி இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இந்த மிரட்டல் குறித்துத் தகவல் கிடைத்ததும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், மோப்ப நாய்களுடன் இணைந்து அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டல் வெறும் வதந்தியா அல்லது உண்மையா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
in
தமிழகம்