2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர்: மதுரை மாநாட்டில் விஜய் அதிரடி!
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைவர் விஜய் வேண்டுகோள்! தொண்டர்கள் உணர்ச்சி பெருக்கில் ஆரவாரம்!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய வேண்டுகோளை முன்வைத்தார். அவர் பேசுகையில், ‘வரும் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர் என நினைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இது, கட்சி சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும், ஒட்டுமொத்த தேர்தல் களமும் தனக்கானது என்பதை உணர்த்தும் வகையில் விஜய் பேசியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் இந்த அதிரடியான பேச்சு, தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.