போலி ஆவணங்கள் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 18,000 மாணவர்கள்! அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் மோசடி! மேற்கு வங்கம், ஒடிசா மருத்துவக் கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை!
போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் (MBBS மற்றும் PG) சேர்ந்திருப்பது அமலாக்கத்துறை (Enforcement Directorate) விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி நடந்தது எப்படி?
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) ஒதுக்கீட்டில் போலி ஆவணங்களைத் தயாரித்து, மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோசடியில் பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும், முகவர்களும் (agents) இணைந்து செயல்பட்டுள்ளனர். போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ்களைத் தயாரிப்பதற்காக முகவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இந்த மோசடி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம், ஏழை மற்றும் தகுதியான மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியற்ற மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மருத்துவர்களாக வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
in
இந்தியா