சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளிய வரும்! இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல... மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும் - மாநாட்டில் விஜய் அதிரடி!
நமது ஒரே அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக - எதிரிகளை அடையாளம் காட்டி பேசிய தவெக தலைவர்!
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரை ஆற்றினார். அப்போது, தனது அரசியல் நுழைவு மற்றும் எதிர்காலத் திட்டம்குறித்துப் பேசினார்.
"சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும்; வேடிக்கை பார்க்க வெளியே வராது; சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும்" எனப் பேசி, தனது அரசியல் பயணத்தை ஆக்ரோஷமாகத் தொடங்கினார்.
தமது அரசியல் பிரவேசத்தைக் கேலி செய்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், "ஷூட்டிங்கில் வந்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றனர்; அதற்குப் பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல... மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும்" என்று முழங்கினார்.
தமது கட்சியின் எதிரிகள்குறித்துத் தெளிவுபடுத்திய அவர், "நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக; நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக" என்று பகிரங்கமாக அறிவித்தார்.
தமது எதிர்கால அரசியல் திட்டத்தைச் சுட்டிக்காட்டிய விஜய், "ஒரு காலம் வரும்.. என் கடமை வரும்.. இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்" என்று கூறி தனது உரையை முடித்தார். அவரது பேச்சுத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.