வண்டி ஓட்டுபவர்களின் பாக்கெட்டில் ஓட்டை போடும் இன்றைய பெட்ரோல், டீசல் விலை! - தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக மாறுபடும் விலை நிலவரம்!
சர்வதேச விலை நிலவரம், மாநில வரிகள்; ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான விலை என்ன? நீங்கள் செலுத்தும் கூடுதல் பணம் ஏன்?
சென்னை: ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு, பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் நிர்ணயிக்கப்படும்போது, வண்டி ஓட்டுபவர்களின் இதயம் பதபதக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் எனப் பல காரணிகளால் ஒவ்வொரு மாவட்டத்திலும் விலை வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையை விட மற்ற மாவட்டங்களில் எரிபொருள் விலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இது, அந்தந்த மாவட்டங்களில் விதிக்கப்படும் உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைப் பொறுத்து மாறுபடுகிறது.
• சென்னை: பெட்ரோல்: ₹100.82 / டீசல்: ₹92.40
• கோயம்புத்தூர்: பெட்ரோல்: ₹101.38 / டீசல்: ₹92.97
• மதுரை: பெட்ரோல்: ₹101.59 / டீசல்: ₹93.25
• திருச்சி: பெட்ரோல்: ₹101.26 / டீசல்: ₹92.83
• சேலம்: பெட்ரோல்: ₹101.70 / டீசல்: ₹93.45
உங்கள் மாவட்டத்தின் சரியான விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அந்தந்த எரிபொருள் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் அல்லது அதிகாரபூர்வ இணையதளங்களைப் பார்ப்பது சிறந்த வழி.
in
தமிழகம்