மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் திருட்டு: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!

மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் திருட்டு: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!

மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் திருட்டு: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!


இந்திய தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டு சேர்ந்து நிறுவனமயமாக்கப்பட்ட திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'பகீர்' குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஏழைகளின் வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள காணொளியில் பகிரங்கமாகச் சாடியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் "புயலைக்" கிளப்பியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான ஆதாரமாக, கர்நாடகாவின் மஹாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் 11,965 க்கும் மேற்பட்ட இரட்டை வாக்காளர்கள், 40,009 போலியான முகவரிகள் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒரே முகவரியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் 4,132 தவறான புகைப்படங்களுள்ள வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். "தேர்தல் ஆணையமும், பாஜகவும் கூட்டு சேர்ந்து தேர்தலைத் திருட முயற்சிக்கின்றன. நாங்கள் அவர்களின் திருட்டை கண்டுபிடித்துவிட்டோம் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால்தான் SIR என்ற பெயரில் இந்த மோசடி நடைபெறுகிறது. ஏழைகளின் வாக்குரிமையைப் பறிப்பதே SIR-இன் முக்கிய நோக்கம்" என்று ராகுல் காந்தி ஆவேசமாகக் கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் டிஜிட்டல் முறையில் வாக்காளர் பட்டியலை வழங்க மறுப்பதன் மூலம் தனது தவறுகளை மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரம்குறித்து ஆதாரங்களை வழங்கினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks