தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்! 38°C-க்கு மேல் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு!Temperature to Rise in Tamil Nadu from Tomorrow

தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்! 38°C-க்கு மேல் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு!Temperature to Rise in Tamil Nadu from Tomorrow
தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்! 38°C-க்கு மேல் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு!


மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பம் இருக்கும்! மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறையும்!

கடந்த சில நாட்களாகவே மதுரையில் 39.5 முதல் 40°C வரை வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், நாளை (ஆகஸ்ட் 29) முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பரவலான இடங்களில் 38°C-க்கு அதிகமான வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, திருச்சி, நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கரூர், ஈரோடு, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 28) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், நாளை (ஆகஸ்ட் 29) ஆங்காங்கே மட்டுமே மழை இருக்கும் என்றும், சனிக்கிழமைக்கு மேல் மழைப்பொழிவு குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks