புதுடெல்லி: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) ரூ.232 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், அந்த அமைப்பின் மூத்த மேலாளர் ஒருவரை மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) கைது செய்துள்ளது.
போலியான மற்றும் தவறான மின்னணுப் பதிவுகளை உருவாக்கி, இந்த நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோசடி, அரசின் முக்கிய நிதி அமைப்பில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ அதிகாரிகள், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மேலாளரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவில், மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
in
இந்தியா