விநாயகர் சதுர்த்தி: மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: மெட்ரோ ரயில் கூடுதல் சேவை ஏற்பாடு! கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு முக்கியமான நேரங்களில் ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கம்!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 27) சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படவுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பொது விடுமுறை நாட்களில் அடர்த்தியான சேவை வழங்கப்படும். அதிகப்படியான பயணிகள் வருகையைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய நேரங்களில் ரயில்களின் சேவையை அதிகரித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மற்ற நேரங்களில், அதாவது காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் கோவில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவே இந்தக் கூடுதல் ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.