தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – நவம்பர் 8 வரை நீடிக்கும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்குத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) அறிவிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து விவசாயிகளுக்குச் சாதகமான சூழலைஏற்படுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை (Light to Moderate Rain) பெய்யக்கூடும். மேலும், இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (நவம்பர் 7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்; நாளை மறுநாள் (நவம்பர் 8) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைப் பொழிவு அதிகரிக்கக்கூடும் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட விவசாயிகளுக்கு நல்லதொரு செய்தி என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில், நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வெதர் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.a
.png)