தங்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இதனால் நடுத்தர மக்கள் தங்கமே வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் குறைய தொடங்கிய தங்கம் விலை நவம்பர் மாதம் வரை யாரும் எதிர்பாராத வகையில் சரிந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கடந்த 12 நாட்களில் சவரனுக்கு சுமார் 12,000 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்றைய தங்கம் விலை

நேற்று தங்கம் விலை எதிர்பாராத வகையில் குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.45 குறைந்து ரூ.11,465க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 22) நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.91,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.11,465ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.12,507ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,00,056ஆக விற்பனையாகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் 1,34,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி அப்டேட்

கடந்த சில நாட்களாக வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article