Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த  தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
News Image

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்கு சந்தை செயல்பாடு உள்ளிட்ட அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் குறைய தொடங்கிய தங்கம், நவம்பர் மாதத்தில் எதிர்பாராத வகையில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது 15 நாட்களில் சவரன் சுமார் 15,000 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று குறைந்த தங்கம்

நேற்று தங்கம் விலை எதிர்பாராத வகையில் குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.470 குறைந்து ரூ.11,510க்கும், ஒரு சவரனுக்கு  ரூ.3,760 குறைந்து ரூ.92,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று விலை உயர்ந்ததா?

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 21) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.12,507ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,00,056ஆக விற்பனையாகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் 1,34,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

வெள்ளி நிலவரம்

தங்கத்துடன் வெள்ளி போட்டி போட்டுக்கொண்டு குறைந்து வந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது ஒரு கிராம் விலை ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks