சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தினமும் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்த வந்த தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று இரண்டு முறை உயர்ந்த தங்கம்

நேற்று தங்கம் காலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.1,360 வரை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதாவது தங்கம் ஒரு கிராம் ரூ.11,770க்கும், ஒரு சவரன் ரூ.94,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

குறைந்தது தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.12,785ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,02,280ஆக விற்பனையாகிறது. நேற்று 2,360 ரூபாய் சரிந்த நிலையில் இன்று ரூ.960 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை என்ன?

வெள்ளி விலை நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article