இனி தங்கத்தை வாங்கவே முடியாது என்று நினைத்து கொண்டிருந்த நடுத்தர மக்களுக்கு கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களில் 10,000 ரூபாய்க்கு மேலாக சரசரவென குறைந்து குஷியை ஏற்படுத்தியது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையும் எதிர்பார்த்து காத்திருந்த நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று உயர்ந்த தங்கம்

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.120 உயர்ந்து ரூ.11,540க்கும், ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.92,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.11,600ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.12,655ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,01,240ஆக விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் ரூ.1,440 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வு

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று வெள்ளி கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article